2025-2026 ஆம் ஆண்டுக்கான பிரதம நிர்வாகத் தெரிவை புதிய அலை கலை வட்டம் நடத்தவுள்ளது.
வட்டத்தின் நிறுவனர் ராதா மேத்தாவின் தலைமையில் எதிர்வரும் 18.05.2025 ஞாயிறன்று மாலை 4 மணிக்கு இந் நிகழ்வு நடைபெறவுள்ளது.
கொழும்பு-13 புதுச்செட்டி தெரு இலக்கம் 176 அமைந்துள்ள எக்சலன்ஸ் சர்வதேச பாடசாலை வளாகத்தில் இதற்கான கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் அமைப்பின் அனைத்து பிரிவுகளினதும் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொள்வர்.
அத்துடன் வட்டத்தில் புதிதாகத் தம்மை இணைத்து கொள்ள விரும்புவோர் அன்றைய தினம் நேரில் கலந்து கொண்டு அங்கத்துவத்தை மட்டும் பெற்றுக் கொள்ள முடியும்.



