(பாறுக் ஷிஹான்)
வெட்டுக் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த குடும்பப் பெண் ஒருவரின் சடலம் பெரிய நீலாவணை பொலிஸாரினால் இன்று (30) மீட்கப்பட்டுள்ளது.
பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விஷ்ணு கோயில் வீதி வீடொன்றில் தனித்திருந்த 37 வயதான பெண்ணே சடலமாக மீட்கப்பட்டார்.
இரு பிள்ளைகளின் தாயான குறித்த பெண்ணின் கழுத்து மற்றும் தலை உள்ளிட்ட பகுதில் பல வெட்டுக் காயங்கள் காணப்படுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மரணமடைந்த குடும்ப பெண்ணின் கணவர் வெளிநாடு ஒன்றில் தொழில் நிமித்தம் தங்கியுள்ளதாகவும் கொலை இடம்பெற்றபோது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி காணொளிகளை சேமிக்கும் கருவி (DVR) கொலையாளியினால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனை பிராந்திய உதவிப. பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டார். அம்பாறை தடயவியல் பொலிஸார் உட்பட பெரிய நீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.









