இந்தியாவில் இன்று (15) காட்டுப் பகுதியில் ஹெலிக்கப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் விமானி உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் கேதார்நாத் ஆலயப் பகுதியிலிருந்து உத்தரகண்டில் உள்ள குப்தகாஷிக்கு பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர், காட்டில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.20 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது, விபத்து நடந்தபோது ஹெலிகாப்டரில் விமானி உட்பட 7 பேர் இருந்தனர்.
இந்த விபத்தில் அவர்கள் அனைவரும் இறந்து விட்டதாக உத்தரகண்ட் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.



