ஈரான் - இஸ்ரேல் மோதலில் எமக்குத் தொடர்பில்லை; அமெரிக்கா!

World
Editor 2025-06-15 17:28:00

Truth Social கணக்கில்   அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இட்டுள்ள பதிவில் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்துவரும் இராணுவ மோதலில் அமெரிக்கா ஈடுபடவில்லை என்று கூறுகிறார்.

ஈரான் மீதான இஸ்ரேலின் புதிய தாக்குதல்களில் அமெரிக்காவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இருப்பினும், இஸ்ரேல் மீதான ஈரானின் பழிவாங்கும் தாக்குதல்களைத் தடுக்க உதவ வேண்டாம் என்று அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகளை ஈரான் எச்சரித்திருந்தது.

இது நடந்தால், பிராந்தியத்தில் உள்ள மூன்று நாடுகளில் உள்ள இராணுவ தளங்கள் மற்றும் கப்பல்களை குறிவைக்கும் என்று ஈரான் சுட்டிக்காட்டியிருந்தது.

இதற்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஏதேனும் தாக்குதல் நடந்தால், அமெரிக்க இராணுவத்தின் முழு பலத்தையும் சக்தியையும் ஈரான் காணும் என்று கூறியுள்ளார்.

"ஈரான் எந்த வகையிலும், அல்லது  எந்த வடிவத்திலும் நம்மைத் தாக்கினால், அமெரிக்க ஆயுதப் படைகளின் முழு பலமும் சக்தியும் இதற்கு முன் கண்டிராத அளவில் உங்கள் மீது விழும்" என்று  டிரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்த இரத்தக் களரியை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய ஒரு ஒப்பந்தத்தை ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் எட்ட முடியும் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail