சம்மாந்துறை பொலிஸாரால் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

crime
Editor 2025-06-18 11:39:00

(பாறுக் ஷிஹான்)
 
ஆற்றோரத்தில் நீண்ட காலமாக   இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மல்வத்தை பகுதியில் செவ்வாய்க்கிழமை (17)  ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற   தகவலின் அடிப்படையில் இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது கசிப்பு உற்பத்திக்கான  200 லீற்றர், 2 இரும்பு பெரல்கள, செப்புக் குழாய் ,1 கேஸ் அடுப்பு  ,  4 அடி நீளமுடைய ரப்பர் குழாய் உள்ளிட்ட உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் இக்கசிப்பு உற்பத்தி நிலையத்தை நடத்தி வந்த   சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார்.

குறித்த சந்தேக நபரை   கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சான்றுப்பொருட்கள் யாவும் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சோதனை நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் நெறிப்படுத்தலில்   சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்தின் வழிநடத்தில்  சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி  தலைமையிலான அணியினால்  முன்னெடுக்கப்பட்டது.
 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail