தலங்கம, உரணாவ, தலவதுகொட சந்திப் பகுதியில் தனது வாகனத்தை முந்திச் செல்ல அனுமதிக்காததற்காக, வாகன சாரதி ஒருவரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய பிராடோ காரின் உரிமையாளரான தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் வைத்திருந்த 9மிமீ உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
நுகேகொடை, மஹாசென் மாவத்தையில் ஒருவர் தனது காரில் கந்தர திசையில் இருந்து தலவத்துகொட நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, சந்தேக நபர் பிராடோ ஜீப்பில் காரின் பின்னால் பயணித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பல சந்தர்ப்பங்களில் பிராடோ காரை முந்திச் செல்ல முயன்றது. ஆனால் சந்தர்ப்பம் இல்லாததால், ஜீப் ஊரனவி-தலவதுகொட சந்திக்கு அருகில் காரைக் கடந்து சென்று நின்றது. இதன்போதே குறித்த தொழிலதிபர் மற்றைய கார் ஓட்டுநரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாகன சாரதி அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, துப்பாக்கியுடன் தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்



