கதுருவெல காதி நீதிமன்ற நீதவானையும் எழுதுவினைஞர் ஒருவரையும் இன்று (04) இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஒரு இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற சம்பவம் தொடர்பாக இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.
கதுருவெல காதி நீதிவான் நீதிமன்றில் விவாகரத்து வழக்கில் தொடர்புடைய ஒரு பெண்ணுக்கு சாதகமான முடிவை வழங்குவதற்காக, மேற்படி நபர்கள் இலஞ்சம் கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் கதுருவெல நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தனர்.



