சட்டவிரோத சிகரெட்களுடன் இருவர் நிந்தவூர் பொலிஸாரால் கைது!

crime
Editor 2025-07-14 08:52:00

(பாறுக் ஷிஹான்)

சட்டவிரோத சிகரெட்டுக்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில்  இரண்டு சந்தேக நபர்களை நிந்தவூர் பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில்  சட்டவிரோதமாக சிகரெட்டுக்கள் விற்பனை செய்யப்படுவதாக  நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
ஏ .டபிள்யூ. எஸ். நிசாந்த வெதகேக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 7 இலட்சத்து 45 ஆயிரம் ரூபா பெறுமதியான 4,601 சட்டவிரோதமாக சிகரெட்டுக்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைதாகினர்.

நிந்தவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில்  பொலிஸ் சார்ஜன்ட்  (36937) பண்டார, பொலிஸ் கான்ஸ்டபிள்  (29752) இசுறு  உட்படலான பொலிஸ் குழு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில்  இரண்டு சந்தேக நபர்களுடன் பெருந்தொகையான இந்த சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன்   சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் கைதான சந்தேக நபர்களையும் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail