49 பேருடன் மாயமான ரஷ்ய விமானம்: எரிந்த பாகங்கள் மீட்கப்பட்டதாக தகவல்!

World
Editor 2025-07-24 13:52:00

ரஷ்யாவின் கிழக்கு அமூர் பகுதியில் காணாமல்போன பயணிகள் விமானத்தின் எரியும் பகுதியை மீட்பு ஹெலிகாப்டர் கண்டுபிடித்ததாக அந்நாட்டின் அவசரகால அமைச்சக தரப்பு தெரிவித்துள்ளது. இந்த விமானத்தில் பயணிகள் உட்பட 49 பேர் இருந்ததாகவும் தகவல்கன் வெளிவந்துள்ளன.

இது குறித்து, “ரஷ்யாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையகம் தெரிவிக்கையில்,  எம்ஐ-8 ஹெலிகாப்டர் திடீரென ரேடார் கட்டுப்பாட்டில் இருந்து விலகி மாயமானது. அந்த, விமானத்தின் எரியும் பகுதியைக் கண்டறியப்பட்டுள்ளது.” என்று டெலிகிராமில் தெரிவித்துள்ளது.

உள்ளூர் அதிகாரிகள், “இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை” என தெரிவித்தனர்.

49 பேர் பலி?! ரஷ்ய-சீன எல்லையில் உள்ள பிளாகோவெஷ்சென்ஸ்க் நகரத்திலிருந்து டின்டா நகரத்திற்குச் சென்ற விமானத்தில் 5 குழந்தைகள் உட்பட 43 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் இருந்தனர். 49 பேருடன் சென்ற இந்த பயணிகள் விமானம் ரஷ்யாவின் கிழக்கு அமூர் பகுதியில் சென்றபோது ரேடாரில் இருந்து காணாமல் போனது. இதனை அமூர் பிராந்திய ஆளுநர் வாசிலி ஓர்லோவ் உறுதி செய்துள்ளார்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail