பதில் பிரதி மாகாணப் பணிப்பாளராக பொறியியலாளர் முனாஸ்!

Provincial
Editor 2025-08-01 11:09:00

 (நூருல் ஹுதா உமர்)

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பதில் பிரதி மாகாணப் பணிப்பாளராக பொறியியலாளர் எம்.எம்.எம். முனாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிமனையில் இவர் தனது கடமைகளை நேற்று (30) புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

சாய்ந்தமருதைச் சேர்ந்த பொறியியலாளர் எம்.எம்.எம். முனாஸ் வடமாகாணம் வவுனியா, முல்லைத்தீவு கிழக்கு மாகாணம் அம்பாறை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிறைவேற்றுப் பொறியியலாளராக 16 வருடங்கள் கடமையாற்றி நிலையிலேயே இவ்வாறு  பதில் பிரதி மாகாணப் பணிப்பாளராக கிழக்கு மாகாண பிரதம செயலாளரினால் நியமிக்கப் பட்டுள்ளார்.

பட்டய பொறியியலாளரான எம்.எம்.எம். முனாஸ் பொறியியல் துறையில் மாஸ்டர் பட்டத்தை மொறட்டுவ பல்கலையிலும் வீதி நிர்வாகம் கற்கை நெறியை டோக்யோ ஜப்பானிலும் நிறைவு செய்துள்ளார். இவர் டோஹா கட்டாரிலுள்ள அமெரிக்க விமான தளத்தில் சிவில் பொறியியலாளராக கடமையாற்றிய நிலையில், சமூக நலனை கருத்திற் கொண்டு அரச பணியில் இணைந்து கொண்டார்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail