மஜ்மா நகரில் கொட்டப்படும் திண்மக் கழிவுகளை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை - தவிசாளர் பைறூஸ்

Provincial
Editor 2025-08-03 11:00:00

(எச்.எம்.எம்.பர்ஸான்)

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்கு உட்பட்ட மஜ்மா நகரில் கொட்டப்படும் திண்மக்கழிவுகளை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் தெரிவித்தார்.

தற்போதைய இடம் குறுகிய நிலப்பரப்பில் காணப்படுவதால் அப்பகுதி விவசாய நிலங்களுக்கும், கொவிட் மையவாடிக்கு வருபவர்களுக்கும் பாரிய நெருக்கடியாகவுள்ளது.

மேலும் திண்மக் கழிவுகள் கொட்டப்படும் குப்பை மேட்டுக்குவரும் யானைகளினால் பெரும் அச்சுறுத்தலும் ஏற்படுகின்றது.

இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட வன பரிபாலன சபை பராமரிப்பிலுள்ள பத்து ஏக்கர் காணி அடையாளம் காணப்பட்டு  பெறப்பட்டுள்ளது.

மிக விரைவில் திண்மக்கழிவு கொட்டும் நடவடிக்கைகள் அங்கு மேற்கொள்ளப்படும் என தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் தெரிவித்தார்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail