மதுபோதையில் இ. போ.ச பஸ்ஸை செலுத்திய சாரதி விளக்கமறியலில்!

crime
Editor 2025-08-04 21:19:00

க.கிஷாந்தன்

மதுபோதையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸை செலுத்திச் சென்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சாரதியை நுவரெலியா நீதிவான் திருமதி. லங்காகனி பிரபூத்திகா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பபட்ட பின்னர், சந்தேக நபரான சாரதியை இம்மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

வெலிமடையிலிருந்து நுவரெலியா வழியாக நீர்கொழும்புக்கு  பயணிகளுடன் சென்ற திவுலப்பிட்டிய டிப்போவுக்குச் சொந்தமான குறித்த பஸ்ஸை நுவரெலியாவின் சீதாஎலிய பகுதியில் நுவரெலியா பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் நேற்றைய தினம் (3) நிறுத்தி சோதனை செய்தபோது, சாரதி மதுபோதையில் இருப்பதை உறுதி செய்த பின்னர், சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, பஸ்ஸில் பயணித்த பயணிகள்  மற்றுமொரு பஸ்ஸில் ஏற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், குறித்த பஸ்ஸில் சாரதி இருக்கையின் பின்புறம் சாரதி பயன்படுத்திய போத்தலில்  மிகுதியாக இருந்த சட்டவிரோத மதுபானமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்   அசங்க சஞ்சீவ பிரியதர்ஷன (47) திவுலப்பிட்டிய - மெதகம்பிட்டிய பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நுவரெலியா பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொலிஸ்  அதிகாரிகள், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும்  மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சாரதி மீது நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடதக்கது


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail