நமது இலங்கை தேசத்தின் கடதாசி தொழில்நுட்பத்தின், (Paper Technology) அறிவியலாளர், ஒருவரின், அழகான, அற்புதமான, புத்தகத்தின், புரட்டப்படாத,வாசிக்கத்தவறிய ,பக்கங்களை, புரட்டியபோது கிடைத்த அழகான, அருமையான, தகவல்களை உறவுகளோடு பகிர்ந்து கொள்வதில் சந்தோசம். அடைகின்றேன். அந்த முழுமையான, அற்புத புத்தகத்தின் பெயர், அல்ஹாஜ் ஏ.எஸ்.எம். பாரூக்.
தென் மாகாணத்தின் பலப்பிட்டி என்ற ஊரில் பிறந்து,ரேவத்த மஹா வித்தியாலயத்தில், ஆரம்பக் கல்வியை ஆரம்பித்து, தரம் எட்டு வரை கல்வி பயின்றார், பின்பு க, பொ,த, (சா) பரிட்சையை எழுதும் வரை, இலங்கையின் கண்டியில் புகழ் பூத்த TRINITY கல்லூரியில் கல்வியை தொடர்ந்தார், அங்கு மிகத் திறமையாக சித்தி அடைந்து, தன்னுடைய A/L உயர் கல்வியை தொடர்வதற்காக கொழும்பு ஸாஹிரா கல்லூரியை தேர்ந்தெடுத்தார். அங்கும் ஆசான்களின் வழிகாட்டலில், தன்னுடைய விடாமுயற்சியால், மிகச் சிறந்த முறையில் சித்தி அடைந்து, பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பையும் பெற்றுக் கொண்டார்..!!
பேராதனிய பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பிரிவை தேர்ந்தெடுத்து, பல்கலைக்கழக பட்டப்படிப்பை, தன்னுடைய, திறமை, முயற்சி, நம்பிக்கை, இவைகளை கொண்டு சாதிக்க வேண்டும், என்ற துடிப்போடு, கற்றுக் கொண்டிருந்தார். ஆங்கில மொழிப் பிரிவில் இருந்த போதும். சிங்கள மொழியின் உதவி விரிவுரையாளராகவும், கடமை ஆற்றினார்.. பல்கலைக்கழகத்தில் மாணவப்பிரிவில், ஏராளமான பதவிகளையும், அலங்கரித்தார் பேராதனை பல்கலைக்கழகத்தில் இறுதியாக கல்வியை கற்று முடிந்து (BSC) Chemistry Special Degree. பட்டம் பெற்றார்.
பேராதனை பல்கலைக்கழகத்திற்கு வருவதற்கு முன்பே இடதுசாரி தலைவர்களினால் கவரப்பட்டு, அரசியல் நீரோடையில் நீந்தியவர், இலங்கையின் இடதுசாரிகளான, அரசியல் வானில் ஒளிரும் நட்சத்திரங்களாக, கண் சிமிட்டி மறைந்த, லங்கா ஸமஸமாஜிக் கட்சியின், மாண்புமிகு, கௌரவ, தலைவர்களான, கலாநிதி என்,எம், பெரேரா, கலாநிதி கொல்வின் ஆர், டி, சில்வா, பெர்னாட் சொய்ஸா, விவியன் குணவர்தன, போன்ற ஆளுமைகளின், பாசறையில், அரசியல் பயின்று, அரசியல் பாடம் படித்து, அவர்களின் அரசியல் நிழலில் வளர்ந்தார்..!!
கல்வி கற்கும் காலத்திலேயே இடதுசாரி கொள்கைகளாலும், தலைவர்களாலும், ஈர்க்கப்பட்டு, இவர் நாட்டுப்பற்றுள்ள, நேர்மையான, தீவிரமான, இடதுசாரி, அரசியல்வாதியானார். லங்கா சமாசஜக் கட்சியில், தன்னை இணைத்துக் கொண்டு, தனது சிறந்த ஆளுமை, கல்வி அறிவு, மொழிப்புலமை, ஆங்கில தேர்ச்சி, அறிவாற்றல் கல்வித்தகைமைகள், போன்ற திறமைகளால், குறுகிய காலத்தில் கட்சியின், உயர் பதவிகளையும், அலங்கரித்தார்.
வாழைச்சேனை கடதாசி, திணைக்களத்தில், கடமையாற்றும் சந்தர்ப்பம் இவருக்கு அமைந்த போது, தன்னுடைய முழுமையான, திறமையைக்கொண்டு, தன்னுடைய, ஆராய்ச்சிகளைக் கொண்டு, தன்னுடைய கண்டுபிடிப்புகளால், வாளைச்சேனை,கடதாசித்திணைக்களத்தை, முன்னேற்றகரமான பாதையில் அழைத்துச்செல்ல உறுதி கொண்டார், கடதாசி தொழிற்சாலையில், ஏராளமான பிரிவுகள் உண்டு. ஒவ்வொரு பிரிவிலும் பல்வேறுபட்ட இயந்திரங்களைக் கொண்டு, ஏராளமான தொழில்பாடுகள் நடக்கும்,கடதாசி உருவாக்கம் பற்றிய தகவல்கள், அதற்கு தேவையான பொருட்கள், என்று ஏராளமான விடயங்களைத்தாங்கி, மேற்கத்திய நாடுகளில், மாதம் ஒரு முறை சஞ்சிகைகள் வெளிவரும், அந்த நாடுகளுடனும், இவர் நட்புக்கொண்டு, தொடர்பை ஏற்படுத்தி, இலங்கையிலும் அத்தகைய மாதாந்த ஆங்கில சஞ்சிகையை. இலங்கையிலும்,வெளியிட்டார், அதற்கு"TAPPOS"என்று பெயர் சூட்டி. EDITOR ராகவும் செயலாற்றினார்.
வாழைச்சேனையில் கடமை புரியும் போது தர்கா நகரில் பாரம்பரியமிக்க, செல்வாக்குமிக்க, குடும்பமான,காலம் சென்ற அல்ஹாஜ் பத்தா ஜே.பியின் புதல்வியான, ஸித்தி ஸரீனாவை மணம் முடித்து, தன்னுடைய குடும்ப வாழ்வை மகிழ்ச்சியோடு தொடங்கினார்.தர்கா நகரை வசிப்பிடமாகக்கொண்டு, எங்களில் ஒருவரானார்..!!
அல்வாஜ் ஏ, எஸ், எம், பாரூக் அவர்களின் அயராத உழைப்பு, திறமை, நேர்மை, இவைகளைக் கொண்டு, இவர் எம்பிலிப்பட்டி என்ற ஊருக்கு இடம்மாற்றப்பட்டார். அங்கும் தன்னுடைய அறிவாற்றலைக் கொண்டு, கடுமையான முயற்சியோடு, கடதாசி சம்பந்தமான ஏராளமான ஆராய்ச்சிகளை செய்து வந்தார், இவருடைய அசாத்திய திறமைகளையும், கல்வித் தகமைகளையும், தொழில் திறமையையும், கண்டு இவருக்கு கடதாசிக் கூட்டுத்தாபனம், புலமை பரிசில் வழங்கி, தொழில்நுட்பக் கல்வியைக் கற்று, தேர்ச்சி பெறுவதற்காக, நோர்வே நாட்டுக்கு அனுப்பி வைத்த போது, நோர்வே பல்கலைக்கழகத்தில் தன்னுடைய விடாமுயற்சியால், தன்னுடைய சுய நம்பிக்கையால், தன்னுடைய தீவிரமான கற்கையினால், அங்கே மிகத் திறமையான சித்தி அடைந்து Post Graduate Diploma In Pulp & Paper Technology என்ற மிக உயர்ந்த பட்டத்தை பெற்றுக் கொண்டார் இது இலங்கையின்(MSC) க்கு நிகரானது..!!
நோர்வேயின்பல்கலைக்கழகத்தில், உயர் தொதொழில்நுட்பக்கல்வியைக்கற்று, தனது நாட்டுக்கும், தனது மண்ணுக்கும், பெருமை சேர்த்த அல்ஹாஜ் ஏ. எஸ். எம். பாரூக் இலங்கை வரும்போது ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை கைப்பற்றி இருந்தது. அவர்கள் தங்களுடைய ஆதரவாளர்களை, தகுதியான பதவிகளுக்கு, தகுதி இல்லாதவர்களை, அமர்த்தினார்கள். தேவைக்கு அதிகமானவர்களுக்கு மேல் அதிகமாக தொழில் வாய்ப்பை வழங்கினார்கள். இனவாதம், ஊழல், களவு, கடதாசித்தினை களத்தில் மேலோங்கியது. இதனை சகித்துக் கொள்ள முடியாத, நாட்டுப் பற்றுள்ள, நேர்மையான, இடதுசாரி கொள்கையுடைய, இவரால் அனைத்தையும் சகித்துக் கொண்டு கடமையாற்ற முடியாததன் காரணமாக, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்..!!
இலங்கையின் இனவாத அரசியலின் துவேச, சிந்தனைகளாலும், ஊழல் நிறைந்த, மலிவான, கேவலமான, அரசியல் கலாச்சாரத்தாலும், மனமுடைந்து போன இவர், தனது மாமா காலம் சென்ற அல்ஹாஜ் பத்தா அவர்களின் வழிகாட்டுதலோடு DARA GEM (Pvt) (Ltd) நிறுவனத்தை தொடங்கி, வியாபாரத்தில், தனது கவனத்தை செலுத்தினார். என்றாலும் கொள்கை, கோட்பாட்டோடு, இடதுசாரி அரசியலையும், சமூகப் பணியையும், தொடர்ந்து செய்தார். தனது கட்சி உயர் பீட அங்கத்தவர்களுடன், அரசியல் கருத்துக்களை, பரிமாறிக் கொண்டார். கட்சி, மாநாடுகளையும், கட்சியினரோடு, இணைந்து நடத்தி, கட்சியிக்கும், தனது ஆதரவாளர்களுக்கும், உற்சாகத்தை கொடுத்துக் கொண்டிருந்தார்
வாழ்க்கை பொதுவாக போராட்டம் நிறைந்தது.... எத்தனையோ வகையில், இன்பம், துன்பம், மாறி, மாறி, மனித வாழ்க்கையில் வந்து செல்லும். இப்படித்தான் இவருடைய வாழ்க்கையில் ஒரு பேரிடி...... தன்னுடைய உயிருக்குயிரான, அன்பு மனைவி, ஸித்தி ஸரீனா, இள வயதில் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று, மூன்று குழந்தைகளையும், தனது அன்புத் துணைவனையும், சோகத்தில் ஆழ்த்திவிட்டு, மறுமை வாழ்க்கையை அடைந்து கொண்டார். குடும்ப உறவுகளோடு, அயலவர்களோடு, ஊர் மக்களோடு, அன்போடு, ஆதரவோடு, கரிசனையோடு, பழகியவர், உறவாடியவர், அன்பு நிறைந்தவர், இன்றும் இவரை மக்கள் நினைவு கூறுகின்றார்கள்....... இந்த பேரிழப்பையும் தாங்கிக் கொண்டவர், பலர் இவருக்கு மறுமணம் முடிக்கும் படி அறிவுரை கூறியும், இள வயது முதல், இவர் தனி மரமாகவே, பிள்ளைகளுக்காகவே, வாழ்ந்தார், வாழ்ந்து கொண்டிருக்கிறார்......... ஸித்தி ஸரீனா அவர்களுக்கு, அல்லாஹ் நாளை மறுமையில், உன்னதமான, ஜென்னத்துல் பிர்தௌஸ், என்னும் சுவனத்தை அடைந்து கொள்ளும் பாக்கியத்தை கொடுப்பானாக, ஆமீன்
கட்சியின் தலைவர் Bபெட்டி வீரக்கோன் அமைச்சரானபோது, அவரின் அந்தரங்க செயலாளராகவும், பதவி வகித்தார். ஏராளமான மஸ்ஜிதுகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், என்று அளப்பரிய சேவை செய்தார். உயர்கல்வி கற்கும், மாணவ, மாணவிகளுக்கு, புலமை பரிசீல்களையும், வரிய, மாணவ, மாணவியருக்கு, கற்றல் உபகரணங்களையும், வழங்கிக் கொண்டிருக்கின்றார். வைத்தியசாலையின் அபிவிருத்தி சங்கத்தின் செயலாளராகவும், கடமை புரிந்தார். அப்போது வைத்தியசாலைக்கு மிக அவசர தேவையாக இருந்த, Ambulance வண்டியையும், பெற்றுக் கொடுத்தார். வைத்தியசாலையின் ஏராளமான, குறைகளை, நிறைகளாக்கினார்..!!
களுத்துறை மாவட்டத்தில் பெண்களின் நலன் கருதி, முதலாவது முஸ்லிம் பெண் சமாதான நீதிவான்களாக, இரு ஆசிரியைகளை, அன்றைய அமைச்சர் பெட்டி வீரக்கொனூடாக நியமனம் செய்தார். அவர்கள் திருமதி வஜீஹா, மற்றும் மர்ஹூமா, திருமதி நளீபா என்பது முக்கியமான குறிப்பிடத்தக்க விடயமாகும்..!!
கடதாசி தொழில்நுட்பத்தை பற்றியும், அதன் செயல்திறன், பயன்கள், நன்மைகள், உற்பத்தி செயல் முறைகள், தொழில்நுட்பம், என்று விரிவாக, தனது சிந்தனையில் உதித்த, எண்ணங்களை, வண்ணங்களாக, செதுக்கி. சிங்கள மொழியில், Kadadhasi Thakshanaya(Paper Technology) என்ற புத்தகத்தை இலங்கையில் முதல் முறையாக, அறிமுகப்படுத்தினார். இந்த நூல் இலங்கையில் பல பல்கலைக்கலங்களிலும், பாடசாலைகளிலும், அதன் வாசிகசாலைகளில் காணலாம். அத்தோடு ஏராளமான கடதாசி தொழில்நுட்பத்திற்கு உபயோகப்படுத்தும், பல புதிய சிங்கள சொற்களையும், அறிமுகப்படுத்தி, இன்று பழக்கத்தில் வழங்கப்படுவதற்கும் காரணமானார். இது விசேட அம்சமாகும்.
இலங்கை வரலாற்றில், கிராமிய மட்டத்தில், விஞ்ஞான தொழில்நுட்பத்தை, ஊக்குவித்து, மக்கள் மயப்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்தை, வளர்ச்சி பாதையில் இட்டுச் செல்ல...... செயல்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தினார். Bபெட்டி வீரகோனின் மறைவை அடுத்து அன்றைய கட்சியின் தலைவராக இருந்த திஸ்ஸவிதாரன இந்த செயல் திட்டத்திற்கு "விதாதா" என்று பெயர் சூட்டினார்..!!
1993 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின், ஆட்சியில் அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடிய, அன்றைய, காலகட்டத்தில், மாகாண சபை தேர்தலில், களுத்துறை மாவட்டத்தில், லங்கா ஸமஸமாஜிக்கட்சியின் வேட்பாளராக, துணிச்சலோடு தேர்தலில் போட்டியிட்டார் என்பதும். குறிப்பிடத்தக்க விடயமாகும்.
விஞ்ஞான தொழில் நுட்பத்தில், பயிற்றுவிப்பும், பயிற்சியும், மக்கள் கணக்கீடும், என்ற தொனிப் பொருளில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாபாத்தில், 05/ 09/ 1998 இல் நடைபெற்ற சார்க் உச்சி மாநாட்டில், இலங்கையின் பிரதிநிதியாக, அல்ஹாஜ் ஏ, எஸ், எம், பாரூக் அவர்கள் கலந்து சிறப்பித்தார் இது இவருக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய கௌரவமாகும்..!!
இலங்கையில் மாறி, மாறி, வந்த ஆட்சியாளர்களின், ஆட்சியைக்கண்டு, மக்கள் வெறுப்படைந்த போது லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர்,திஸ்ஸ விதாரன, தன்னிச்சையாக, ராஜபக்ஷகளோடு கைகோர்க்க துணிந்த போது, அதனை எதிர்த்து, தன்னுடைய மற்றைய உயர்பீட அங்கத்தவர்களையும், அரவணைத்துக் கொண்டு கட்சியிலிருந்து வெளியேறினார். தனது கொள்கை கோட்பாட்டுக்கு முரணாக கட்சியின் தலைவர் செயற்பட்டதனால், ஏற்பட்ட பிளவு இது. உயர் பிட உறுப்பினர்கள் அனைவரும், ஒன்று கூடி, என்.பி.பி என்ற ஒரு புதிய கட்சியை உருவாக்குவதற்கு, இவரும், தோழர்களும், உறுதுணையாக நின்றார்கள், இவர்களோடு, இன்னும் பல சம்மேலனங்களும், ஒன்றாக கூடி, கைகோர்க்க,என்,பி,பி,கு, வலுச் சேர்த்தார்கள். அப்போது களுத்துறை மாவட்டத்தின்,என்,பி, பி உயர்பீட அங்கத்தவராகவும் இவர் இருந்தார்..!!
இலங்கை எப்போதும் வளர்முக நாடாகவே தொடர்ந்தும் அறியப்படுவது துன்பமான விடயம். மேற்கத்திய நாடுகளில் இவர் பிறந்திருந்தால் இன்று இவரிடமிருந்து ஏராளமான பிரயோசனங்களை அவர்கள் பெற்றிருப்பார்கள். அத்தோடு இவர் ஒரு நல்ல கவிஞர், எழுத்தாளர், என்பதும் முக்கியமான ஒரு விடயமாகும். இவருடைய பாடல்களை இன்றும் YouTube காணலாம்
அல்ஹாஜ் பாரூக் போன்ற புத்திஜீவிகள், கல்விமான்கள், அறிவாளிகள், ஏராளமானவர்கள் நாட்டுப்பற்றோடு, சேவை செய்ய காத்திருக்கின்றார்கள். ஆனால் இவர்களை எந்த ஆட்சியாளர்களும், பயன்படுத்தவில்லை, என்பதை ஒரு துரதிஷ்டம் என்றே கூற வேண்டும்..!!
எல்லாம் வல்ல அல்லாஹ், இவருடைய சமூகப் பணியை ஏற்றுக்கொண்டு. நீடித்த ஆயுளையும், தேக ஆரோக்கியத்தையும், பொருளாதார அபிவிருத்தியையும், வழங்குவானாக..!!