நல்லூரில் வீற்றிருந்து நல்லருள் தரும் அலங்காரக் கந்தன்! -ரவிவர்மா

Articles
Editor 2025-08-06 18:48:00

ரவிவர்மா

யாழ்ப்பாணத்தின் அடையாளம் நல்லூர் கந்தசாமி கோயில். அலங்காரக் கந்தன் என பக்தர்களால்  வணங்கப்படும் நல்லூர் பெருந்திருவிழா சிறப்பாக நடைபெறுக் கொண்டிருக்கிறது.

 பண்டையக்கால வரலாற்றுப் பெருமைமிக்க நல்லூர் திருவிழாவின்  போது யாழ்ப்பாணக் குடாவே  சிறப்படைந்து விடும்.  பெருந்திரளான பக்தர்கள் நல்லூரை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கி விடுவார்கள்.

12ம் நூற்றாண்டு தொடக்கம் 17ம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாக நல்லூர் இருந்ததாக வரலாறு சொல்கிறது.
13ம் நூற்றாண்டில் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆட்சிசெய்த ஆரிய சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது அரசனான கலிங்கமாகன் அல்லது கூழங்கை சக்கரவர்த்தியால் கட்டுவிக்கப்பட்டதாக யாழ்ப்பாண வைபவமாலையில் கூறப்பட்டுள்ளது.(கை ஊனமான நிலையில் உள்ளதால் இந்த அரசன் கூழங்கைச் சக்கரவர்த்தி என அழைக்கப்பட்டான்)


நல்லூர் கந்தசுவாமி கோவில் முத்திரைச் சந்தியிலுள்ள ‘குருக்கள் வளவு’ என்ற காணியில் கட்டப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் கச்சேரியில் 1882ம் ஆண்டு உருவாக்கபட்ட சைவசமயக் கோவில்கள் தொடர்பான பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண அரசின் இறுதிக்காலத்தில் நல்லூரில் இருந்த மிகப்பெரிய கோவில் இது என போர்த்துக்கேயர்களுடைய குறிப்புக்களில் இருந்து அறியமுடிகிறது.
அத்துடன், யாழ்ப்பாண மன்னனான ஆரியச்சக்கரவர்த்திகளின் அரண்மனையை அண்டிய பகுதியிலேயே பழைய கோவில் அமைந்திருந்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன.


யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த மன்னர்கள் நல்லூரை மையமாக வைத்து கிழக்கில் வெயிலுகந்த பிள்ளையார் கோயிலையும், தெற்கில் கைலாசநாதர் கோயிலையும், மேற்கில் வீரமாகாளி அம்மன் கோயிலையும், வடக்கில் சட்டநாதர் கோயில் என ஆலயத்தின் நான்கு பக்கங்களிலும் அரண்களை அமைத்திருந்தார்கள்.
நல்லூர்க் கந்தசுவாமி கோவிலை இரகுநாத மாப்பாண முதலியார் வம்சத்தினரே பரம்பரையாக நிர்வகித்து வருகின்றனர்.

ஈழத்திலுள்ள கோவில்களுள் நேரம் தவறாத நித்திய, நைமித்திய பூசைகள் மூலம் நல்லூர் கந்தசுவாமி கோவில் மற்றைய கோவில்களுக்கு முன்னோடியாக விளங்குகின்றது.


வருடாந்த மகோற்சவம்

ஆடி ஆமாவாசையிலிருந்து 6ம் நாள் கொடியேறி 25 நாட்கள் நடைபெறுகின்றது.
இந்தத் திருவிழா யாழ்ப்பாணத்து மக்களுக்கு மட்டுமன்றி வேறு பிரதேச மக்களுக்கும் முக்கியமான திருவிழாவாக கொள்ளப்படுகிறது.யாழ்ப்பாணத்திவிட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசிப்பவர்கள்  நல்லூர் உற்சவகாலத்தில்  தாய்நாட்டுக்குத் திரும்புவார்கள்.  

  ஐப்பசி மாதத்தில் கந்தசஷ்டி, சூரன்போர், இயமசங்காரம், கார்த்திகைத் திருவிழா,கற்பூரத்திருவிழா,தைப்புபூசம், சித்திரை வருடப்பிறப்பு என பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.



 யாழ்ப்பாணத்தில் ஆறுகாலப்பூசைகள் நடைபெறும் ஒரே ஒரு ஆலயம் நல்லூர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.


யாழ்ப்பாணத்தின் மாவிட்ட புரத்திலுள்ள மாவிட்டபுரம் கந்தனை அபிஷேகக் கந்தன் எனவும், செல்வச்சந்திநி முருகனை அன்னதானக் கந்தன் எனவும், நல்லூர்க்கந்தனை அலங்காரக் கந்தன் எனவும் வரலாறுகள் சிறப்பித்துக் கூறுகின்றன. அர்ச்சனை அப்ற்றுச்சீட்டு ஒரு ரூபா மட்டுமே.  எந்த நிலையிலும் அது மாற்ற‌மடையாது.
இவ்வாலயத்தில் நித்திய, நைமித்திய பூசைகள் காலந் தவறாது  நடைபெறுகின்றன. தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பூஜை இடம்பெறுகின்றமையும், மாலையில் பள்ளியறைப் பூஜை இடம்பெறுகின்றமையும் இந்த ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்றாகும்.


மகோற்சவ காலங்களில் மெய்யடியார்கள் காவடியாட்டம்|காவடி எடுத்தல், தீச்சட்டியெடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல், அடியழித்தல், முதலான நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவர்.



 நேரம் தவறாமை  நல்லூர் ஆலயத்தின் சிறப்பம்சமாகும்.பிரபலமானவர்களும், அரசியல் தலைவர்களும் கோயில் திறந்திருக்கும் நேரத்தில் மட்டும்  வணங்கலாம்.  கோயில் பூட்டிய பின்னார் யாருக்காகவும் நல்லூர் ஆலய கதவு திறக்கப்படுவதில்லை.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail