மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம்!

News
Editor 2025-08-17 19:43:00

(றியாஸ் ஆதம்)

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி பி.எஸ்.என்.விமலரத்ன சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சனிக்கிழமை (16) விஜயம் மேற்கொண்டார்.

வைத்தியசாலையின் சில பிரிவுகளுக்கும் சென்று பார்வையிட்ட அவர் சீன அரசாங்கத்தின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டடத் தொகுதியையும் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து வைத்தியசாலை நிர்வாகத்தினர், உத்தியோகத்தர்கள், ஊழியர்களையும் சந்தித்த மாகாணப் பணிப்பாளர், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து உரிய தீர்வுகளையும் வழங்கினார்.

குறிப்பாக, சீன அரசாங்கத்தின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டடத்தின் கழிவு முகாமைத்துவம் தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தப்பட்டு கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன், சம்மாந்துறை  ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் டீ.பிரபாசங்கர், பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர் உட்பட சம்மாந்துறை வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail