போதைப்பொருட்களுடன் கைதான தர்காநகர் தம்பதி!

crime
Editor 2025-08-27 19:44:00

(க.கிஷாந்தன்)

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த தம்பதியினர் நேற்றிரவு  (26) கைது செய்யப்பட்டுள்ளனர் என அட்டன் பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி தெரிவித்தார்.

கினிகத்தேன, பொல்பிட்டிய  - களுகல பகுதியல் உள்ள வீதி சோதனை சாவடியில் வைத்தே இவர்கள் சந்தேகத்தின் பேரில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தர்கா நகரை சேர்ந்த 25 வயது சந்தேக நபரும், அவரின் 20 வயதான கர்ப்பிணி மனைவியும்  தர்கா நகரில் இருந்து நுவரெலியா நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர்.

இந்நிலையில் களுகல பகுதியில் உள்ள பொலிஸ் வீதிச் சோதனைச் சாவடியில் இவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவர்கள் மறைத்து வைத்திருந்த போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன

50 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 50 கிராம் ஹெரோயின் என்பனவே இவ்வாறு கைப்பற்றப்பட்டன.

ஈசி கேஸ்மூலம் பணத்தை பெற்ற பின்னர் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் போதைப்பொருளை வைத்துவிட்டு அது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு சந்தேக நபர் தெரியப்படுத்துவார் என தெரிய வந்துள்ளது.

இவர் இதற்கு முன்னரும் போதைப்பொருள் விநியோகம் தொடர்பில் பல பொலிஸ் நிலையங்களால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்னர் என தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி தடுப்பு காவல் உத்தரவைப் பெற்று, இவர்களிடம் போதைப்பொருள் வாங்கும் நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail