வாசித் எம்.பி - கல்வி அபிவிருத்திக்குழு சந்திப்பு!

Provincial
Editor 2025-08-28 20:25:00

(ஆதம்)

பொத்துவில் கல்வி அபிவிருத்திக் குழுவினருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் வாசித்துக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (27) பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது, பொத்துவில் கல்வி வலயம் மற்றும் பிரதேச கல்வி அபிவிருத்தி தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

பொத்துவில் பிரதேச பாடசாலைகளுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் நேரடியாக விஜயம் செய்து அவற்றின் தேவைகளைக் கேட்டறிந்துவரும் பாராளுமன்ற உறுப்பினரின் நடவடிக்கையினை பாராட்டிய கல்விக் குழுவினர் கல்வி அபிவிருத்தி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் முன்னெடுக்கும் சகல நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் இதன்போது குறிப்பிட்டனர்.

பொத்துவில் பிரதேச கல்வி அபிவிருத்திக் குழுவின் தலைவர் டொக்டர் உவைஸ் பாறூக், செயலாளர் விரிவுரையாளர் தாஜஹான், பொருளாளர் ஆசிரியர் றிஸ்வி மற்றும் ஆலோசகர் விரிவுரையாளர் சமீம், கல்விக் குழுவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினரின் கடந்த கால மற்றும் தற்கால செயற்பாடுகளை பாராட்டிய கல்விக் குழுவினர் அவருக்கு நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவித்தது.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail