மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் தீ பரவல்!

Provincial
Editor 2025-09-01 17:33:00

மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் இன்று திங்கட்கிழமை (01) பகல் 12.30 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

மின் ஒழுக்கு காரணமாக இந்த தீ பரவல் ஏற்பட்டிருக்கலாமென தெரிய வருகிறது.

களஞ்சியசாலையில் தீ பரவியதையடுத்து பொதுமக்கள்,பிரதேச சபை ஊழியர்கள் , பாடசாலை ஆசிரியர்கள் இணைந்து தீயை அணைத்து தீ பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.சுமார் அரை மணி நேர போராட்டத்தின் பின்னர் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன்போது மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் காணப்பட்ட கதிரை,மேசை,ஏனைய பெறுமதியான பல உபகரணங்கள் தீயில் எரிந்து சேதமாகியுள்ளன.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail