மாபெரும் இலவச மருத்துவ முகாம்!

events
Editor 2025-09-12 21:54:00

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு ஏற்பாடு செய்துள்ள மாபெரும் இலவச மருத்துவ முகாம் எதிர்வரும் (2025.09.14) ஞாயிற்றுக்கிழமை திருக்கோவில் தாண்டியடி விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.

இதில் விசேட வைத்திய நிபுணர்களின் சேவைகள், பல் மருத்துவ சேவை, தொற்று நோய் மற்றும் தொற்றா நோய் பரிசோதனைகள், சுகாதாரக் கல்வி உட்பட விழிப்புணர்வு நிகழ்வுகள், 
அத்துடன் பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு மூக்குக்கண்ணாடி வழங்குதல், பரிந்துரைக்கப்பட்ட நபர்களுக்கு காது கேட்கும் கருவி வழங்குதல், விசேட தேவையுடையவர்களுக்கு சக்கர நாற்காலிகள், நடைப் பயிற்சி கருவிகள் வழங்குதல் என மேலதிகமாகவும் பல்வேறு சேவைகள் வழங்குவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail