வித்தியாசங்களின் விளைவிடமாக அரங்கம் காணும் ஹைக்கூ கவியமர்வு

events
Editor 2025-09-13 20:35:00

சர்வதேச  சமாதான  தினமான 21.09.2025 அன்று  புதிய அலை கலை வட்ட இளைஞர் அணியினர் மாதாந்தம்  நடத்தும்  ஹைக்கூ  கவியரங்கின் நான்காவது  அமர்வு  நடைபெறவுள்ளது.

சுயாதீன ஊடகவியலாளரும் கவிதாயினியுமாகிய திருமதி மேரி ஸ்ரேலா  இந்த  அமர்வுக்கு தலைமை  ஏற்கிறார்.

கொழும்பு-13,புதுச்செட்டித்தெருவில் அமைந்துள்ள எக்ஸலன்ஸ் சர்வதேச  பாடசாலை வளாகத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் வித்தியாசமான  அம்சங்களும் இடம் பெறவுள்ளது.

முற்றிலும் இளங்கலைஞர்கள் ஒன்றிணைந்து  உருவாக்கி -வெகு விரைவில் திரையிடப் படவுள்ள "சனாதனனின் மெளனமொழி " என்ற முழுநீளத் திரைப்படக்  கலைஞர்கள் பங்கேற்கும் முன்னோட்ட நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

இந்த  நிகழ்வில் கலந்துகொண்டு ஹைக்கூ  கவிபாட விரும்பும் ஆர்வலர்கள்  உடன் 075 4880172  என்ற வட்சப் இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail