அஷ்ரஃபின் 25ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு! (படங்கள்)

events
Editor 2025-09-16 22:33:00

பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 25ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு “தோப்பாகிய தனிமரம்” எனும் தொனிப்பொருளில் நிந்தவூர் கமு/அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் காஸிமி கேட்போர் கூடத்தில் இன்று (16) இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிம் வரவேற்புரை நிகழ்த்தியதோடு, முஸ்லிம் முழக்கம் மர்ஹும் ஏ.எல்.அப்துல் மஜீதின் “ஓயாத புயலும் சாயாத மரமும்” எனும் நூலும் வெளியீட்டு வைக்கப்பட்டது. இந்நூலை பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் நூலாய்வு செய்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் நிகழ்வில் நினைவுப் பேருரை நிகழ்த்தியதுடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நிகழ்வுரை நிகழ்த்தினார்.

ஏற்புரையை பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பர் வழங்கினார்.

இந்நிகழ்வில் நூல் வெளியீடு, விவரணப்படம், நினைவேந்தல் பாடல், துஆ பிரார்த்தனை உட்பட மேலும் பல நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் செயலாளர் சட்டத்தரணி நிஷாம் காரியப்பர், எம்.எஸ் அப்துல் வாசித்,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய அமைப்பாளருமான  எம்.எஸ் தௌபீக், தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லாஹ், கட்சியின் பொருளாளர் ரஹ்மத் மன்சூர், தவிசாளர்கள்,  பிரதித்தவிசாளர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், பெருந்திரளான பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail