14 வயதான மாணவி விவகாரம்: ஆசிரியருக்கு விளக்கமறியல், அதிபருக்குப் பிணை!

crime
Editor 2025-11-19 09:39:00

14 வயது மாணவியை துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்ட ஆசிரியரை டிசம்பர முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மொரட்டுவ நீதிவான் நேற்று (18) உத்தரவிட்டார்.

சம்பவத்தை மறைத்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட  அதிபரை, இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கவும் உத்தரவிடப்பட்டது.

மொரட்டுவ பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலை  ஆசிரியர் ஒருவர் 14 வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காகவும் இந்தச் சம்பவத்தை மறைத்ததற்காக அந்தப் பாடசாலை அதிபரையும் மொரட்டுவ பொலிஸார் சமீபத்தில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பதுரலிய மற்றும் பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 58 மற்றும் 59 வயதுடைய இருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail