மஹியங்கனை, சங்க்போபுராவில் வசிக்கும் 51 வயதுடைய நபர் ஒருவர் காணாமல் போனதாக அக்டோபர் 17 ஆம் திகதி மஹியங்கனை பொலிஸ்
நிலையத்துக்கு கிடைத்த முறைப்பாட்டை விசாரித்த பொலிஸார், அக்டோபர் 21 ஆம் திகதி வியன்ன ஓயாவில் காணாமல் போனவரின் மோட்டார் சைக்கிளைக் கண்டுபிடித்தனர்.
மேலும் மூன்று நாட்களுக்குப் பின்னர் 24 ஆம் திகதி கிரந்துருகோட்டே, உல்ஹிட்டிய நீர்த்தேக்கத்தில் அவரது உடல் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இது சந்தேகத்துக்கிடமான மரணமாகக் கருதப்படுவதால், பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், நேற்று (19) மஹியங்கனை பொலிஸ் நிலையத்துக்கு வந்த ஒருவர், குறித்த மரணம் ஒரு கொலை என்று ஒப்புக்கொண்டுள்ளார்.
இறந்தவரின் மனைவியுடனான தனது தகாத உறவுக்கு திருமணமானவர் தடையாக இருந்ததால், அவரது மனைவிக்குத் தெரிந்தே இந்தக் கொலையைச் செய்ததாக அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
இதன்படி, இந்தக் கொலையில் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் அந்த நபரைக் கைது செய்ததுடன் இறந்தவரின் மனைவியையும் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
ஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



