அயகம பொலிஸ் பிரிவின் கொலம்பவ பகுதியில் பெண் மற்றும் அவரது 16 வயது மகன் மீது அமிலத் (அசிட்) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று (20) இரவு இந்த அமிலத் தாக்குதல் இடம்மெற்றுள்ளதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் அசிட் தாக்குதலில் படுகாயமடைந்த தாயையும் மகனையும் அயகம மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இருப்பினும் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விசாரணையில், அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறில் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருப்பது தெரிய வந்தது.
பெண்ணின் சடலம் இரத்தினபுரி மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை கைது செய்ய அயகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



