நீலாவணை பொலிஸ் பிரிவில் புதையல் தோண்டும் நவீன கருவி மீட்பு!

News
Editor 2025-12-02 20:06:00

பாறுக் ஷிஹான் 

புதையல் தோண்டும் நவீன கருவி ஒன்று   மீட்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு பாதுகாப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள   புறநகர் பகுதி வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் புதையல் தோண்டும் நவீன கருவி   மீட்கப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கமைய  குறித்த கருவி  மீட்கப்பட்டு பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக    எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட ஜேர்மனி நாட்டு தயாரிப்பிலான இந்த உபகரணம் நிலத்தடியில் உள்ள தங்கம் உட்பட புதையல்களை இலகுவாக கண்டறியக் கூடியவாறு வடிவமைக்கப்பட்டிருந்தது.

மேலும் வேறு ஏதாவது சட்டவிரோதமான பொருட்கள் தொடர்பில் கண்டறிந்து மீட்பதற்கு விசாரணைகளை  கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனைக்கு அமைய  பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பொலிஸ் பரிசோதகருமான பி.கஜேந்திரனின்  வழிகாட்டுதலில் பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail