கஞ்சாவுடன் கைதானவரிடம் சம்மாந்துறை பொலிஸார் விசாரணை!

News
Editor 2025-12-15 10:25:00

பாறுக் ஷிஹான்

கஞ்சா போதைப்பொருளை  விற்பனை செய்து கொண்டிருந்த நிலையில் கைதான 48 வயதுடைய சந்தேக நபர் குறித்து சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புற நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய நபர் குறித்து பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது ஞாயிற்றுக்கிழமை (14)  இவர் கைது செய்யப்பட்டார்.

சம்மாந்துறை மலையாடி கிராமம் 2  பகுதியைச் சேர்ந்த  கைதான 48 வயதுடைய  சந்தேக நபரிடமிருந்து 70,000 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருள்  ஒரு மோட்டார் சைக்கிள்  கைத்தொலைபேசி  என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின்  ஆலோசனைக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின்  வழிகாட்டலில்  ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என். றிபாய்டீன் தலைமையிலான குழுவினரால் இந்த முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உட்பட   சான்றுப் பொருட்கள் யாவும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail