படைப்பாளிகளுக்கு கெளரவம்: கலாமித்ரா விருது விழா!

events
Editor 2026-01-12 20:29:00

கலை,இலக்கிய மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு   வளர்ந்து வரும்  இளம் படைப்பாளிகளுக்கு களம் அமைப்பதை பிரதானமான செயற்பாடகவும் கொண்டு  தலைநகரில் கடந்த  45ஆண்டுகளாக  பணியாற்றி வரும் புதிய அலை கலை வட்டம் வரும் ஐனவரி 30ஆம் திகதி 46ஆவது  ஆண்டுக்குள்  காலடி பதிக்கின்றது.

பணிகளின் வரிசையில் 1995ஆம் ஆண்டு  முதல்  இளையோருக்கான கலை,கலாசாரப் போட்டிகளை நடத்தி  விருதளித்து   ஊக்குவித்து வரும் இந்த  அமைப்பு  இதன் 20ஆவது  ஆண்டின் தொடராக கலாமித்ரா விருது விழாவை  வரும் 30 ஆம் திகதி கொழும்பு-11 செட்டியார் தெருவில்  அமைந்துள்ள  கல்யாண முருகன் மண்டபத்தில்  மாலை 6 .00 மணிக்கு  நடத்துகின்றது.

இவ் விழாவிற்கு அமைப்பின்  நிறுவனர்  ராதாமேத்தா  தலைமை ஏற்கிறார். இதில் பிரதம அதிதியாக  ஹாசிம் உமர் பவுண்டேஷன் அமைப்பின்  நிறுவனர் ஹாசிம் உமர் கலந்து  சிறப்பிக்கின்றார்.

இந் நிகழ்வினில் கலை,கலாசார  போட்டிகளில் பங்கேற்று  வெற்றி  பெற்ற 25 பேருக்கு  வெற்றியாளர் விருதும்  கலை,இலக்கிய  படைப்பாக்கங்களில் தொடர்ந்து  பங்களிப்பு  செய்து வரும் பத்துதுறைகளை சார்ந்த  பத்துபேருக்கு கலாமித்ரா  விருதும்  சமூக மற்றும் கலை ஊடகப்பணிகளில் சிறப்பாகச் செயற்பட்டு வரும் 15 பேருக்கு  சிறப்பு  விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

இந்நிகழ்வு  புதிய அலை கலை வட்டத்தின் பிரதம நிர்வாகம்  அதன் தலைவர் ஷண்மு, செயலாளர்  சி.அழகேஸ்வரன்  மற்றும்  பொருளாளர் ரவிராம் ஆகியோரின்  ஏற்பாட்டில் ஓருங்க மைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail