பூமுதீன் மலீக்
வருமானத்தை ஈர்ப்பதற்கான திட்டம் மட்டுமல்ல; நாகரிகங்களை வரவேற்கும் கலாசாரப் புரட்சியுமாகும்!
சவூதி அரேபிய வெளியுறவுத்துறை அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின் ஃபர்ஹான், ரியாத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் நாகரிகங்களின் கூட்டணி மன்றத்தில் (UN Alliance of Civilizations Forum) உரையாற்றுகையில்:
"சவூதியின் 'விஷன் 2030' என்பது சவூதி சாம்ராஜ்யத்தின் வருவாய் ஆதாரங்களைப் பன்முகப்படுத்துவதை மட்டும் நோக்கமாகக் கொண்டதல்ல.
பிற நாகரிகங்களையும் கலாச்சாரங்களையும் வரவேற்று - நடுநிலைமை ஊடாடும் மதிப்புகளைக் கட்டமைக்க முயலும் ஒரு தேசிய கலாச்சார திட்டமாகும்.
இது தீவிரமயமாக்கல் மற்றும் வெறுப்புக்கான அழைப்புகளை எதிர்த்துப் போராடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது."என்றார்.



