SLMMF - Asia Centre இணைந்து நடாத்திய டிஜிட்டல் பாதுகாப்பு இணையவழி செயலமர்வு

events
Editor 2026-01-27 20:22:00

ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம், தாய்லாந்தை தளமாக கொண்டியங்கும் Asia Centre நிறுவனத்துடன் இணைந்து நடாத்திய  ‘ஊடகவியலாளர்களுக்கான டிஜிட்டல் பாதுகாப்பு - Digital Security Training’ செயலமர்வு இணையவழியாக 24.01.2026 சனிக்கிழமை நடைபெற்றது.

மீடியா போரத்தின் தலைவரும் விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான எம்.பி.எம்.பைறூஸ் தலைமையில் நடைபெற்ற இப் பயிற்சி நெறியில் வளவாளராக Asia Centre நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் Sanjay Gathia கலந்து கொண்டார். இதில் 45 ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதில் ஆர்வத்தை வெளிப்படுத்திய பங்குபற்றுனர்கள் தமது பிரதேசங்களில் இதே பயிற்சி நெறியை முன்னெடுப்பதற்கான வழிகாட்டல்களையும் SLMMF - Asia Centre ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கவுள்ளன.

ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் ஊடகவியலாளர்களுக்கு சர்வதேச தரம் வாய்ந்த பயிற்சி வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail