ஐ.சி.சி ரி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக வீரர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் நோக்கில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (05) பயிற்சி அமர்வுக்குப் பிறகு இலங்கை கிரிக்கெட் அணியை என்.சி.சி மைதானத்தில் சந்தித்தார்.
தொடர்ச்சியான தோல்விகள் மற்றும் இரசிகர்களின் செயல்திறன் குறித்த விமர்சனங்களுக்குப் பிறகு, இலங்கை அணி அழுத்தத்தின் கீழ் இலங்கையில் நடைபெறும் உலகக் கோப்பையில் நுழைகிறது.
இந்தப் பின்னணியில், பெப்ரவரி 8 ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ள போட்டியின் ஆரம்ப்ப் போட்டிக்குத் தயாராகும் வீரர்களை ஊக்குவிப்பதற்காக ஜனாதிபதி அநுர திசாநாயக்க நேரில் அவர்களைச் சந்தித்தார்.



