கல்முனையில் பொலிஸார் கடும் சோதனை! ( படங்கள்)

Provincial
Editor 2026-02-10 17:02:00

(பாறுக் ஷிஹான்)

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும்  மற்றும் சட்டத்தை நிலைநாட்டும் முகமாகவும் கிளின் சிறிலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம் கல்முனை   பிராந்தியத்தில்     பொலிஸாரின்விசேட  திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு  50  பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இச்சோதனை நடவடிக்கையானது  திங்கட்கிழமை(9) இரவு  கல்முனை பிரதான பஸ் நிலையத்தின் முன்பாக  கிழக்கு மாகாண  சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தர  ஆலோசனையில்  அம்பாறை  மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வெதமுல்ல வழிகாட்டலில்  அம்பாறை மாவட்ட  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி  நெறிப்படுத்தலில்  அம்பாரை மாவட்ட  கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் பணிப்புரைக்கமைய  மேற்கொள்ளப்பட்டது.

இத் திடீர் சோதனை நடவடிக்கையில்      கல்முனை ,சவளைக்கடை  பொலிஸ் நிலைய    பொலிஸார் இணைந்து  கொண்டதுடன்  சவளக்கடை  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய  மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி   ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

குறிப்பாக இச்சோதனை நடவடிக்கையின் போது  மோட்டார் சைக்கிள்கள் உட்பட கனரக வாகனங்கள் கட்டங் கட்டமாக பொலிஸாரினால் இடைமறிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டன. அத்துடன்  வீதி ஒழுங்குமுறை தொடர்பான ஆலோசனைகள்  பொலிஸாரினால் வழங்கப்பட்டன.

மேலும் இரவில் பயணம் மேற்கொள்ளும் கல்முனை கொழும்பு குளிரூட்டப்பட்ட ப்ஸ்களின் வழித்தடை பரிசோதனை குறித்த பஸகளின் சோதனை  என்பன முன்னெடுக்கப்பட்டன.

அத்துடன்  மோட்டார் சைக்கிள் ஆவணம்  காப்புறுதி எதுவும் இன்றி மோட்டார் சைக்கிளை செலுத்துவது,  சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது,   தலைக்கவசம் அணியாது செல்வது   ,  ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது,   அதிவேகமாக செல்வது  மிக ஒலி எழுப்பிய மோட்டார் சைக்கிள்கள்  தொடர்பில் கண்காணிக்கப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டன.

இதே வேளை   பொதுப்போக்குவரத்து சட்டங்களை மீறும்  நபர்கள் சட்ட விரோத கடத்தல்களுக்கு துணை நிற்கும் நபர்களுக்கு  எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என   பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail