தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்ட சோமாலிய பயணிகள் விமானம் ஒன்று அந்நாட்டு தலைநகரின் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே கடற்கரையில் வீழ்ந்து நொறுங்கியது.
இருப்பினும், விமானத்தில் இருந்த 55 பேருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானியின் திறமையால் பயணிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
மொகடிஷுவிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, சம்பந்தப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது..
அந்த நேரத்தில், சோமாலிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் விமானத்தை மீண்டும் தரையிறக்க அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.



