இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஈரான் மீது நடத்திய கூட்டு ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) சிறிது நேரத்துக்கு முன்பு உறுதிப்படுத்தின.
வடக்கு இஸ்ரேலில் பல வெடிச்சத்தங்கள் கேட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏவுகணைத் தாக்குதல்கள் ஈரானில் இருந்து வந்ததாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளும் உறுதிப்படுத்தியுள்ளன. இருப்பினும், தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுத்ததாகக் கூறியுள்ளனர்.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் நாட்டின் குடியிருப்பாளர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும், பொதுமக்கள் பொறுப்புடன் செயற்படுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
தெஹ்ரானில் மூன்று வெடிப்புகள் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



