ஈரானின் புதிய உச்சத் தலைவர் – மொஜ்தபா கொமைனி (Mojtaba Khamenei) நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது தந்தையான அல கொமைனிக்குப் பதிலாக ஈரானின் புதிய உச்சத் தலைவராக (Supreme Leader) இவரைத் தெரிவு செய்துள்ளதாக ஈரான் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த முடிவை ஈரானின் Assembly of Experts அதிகாரபூர்வமாக அறிவித்ததாக கூறப்படுகிறது.
அரச தொலைக்காட்சி அறிவிப்பில், தற்போதைய போர்நிலை மற்றும் எதிரிகளின் நேரடி அச்சுறுத்தல்கள் இருந்த போதிலும், புதிய தலைவரைத் தெரிவு செய்யும் செயல்முறை ஒரு நொடியும் நிறுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், Assembly of Experts செயலாளர் அலுவலகங்கள் மீது நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் சில பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் உயிரிழந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.



