ஓட்டமாவடியில் மீன் வியாபாரிக்கு உதவும் பூனை!

Articles
Editor 2026-03-18 16:38:00

(எச்.எம்.எம்.பர்ஸான்)

வீடுகளில் செல்லப் பிராணிகளை வளர்ப்போர்கள் தற்போது கூடுதலாக பூனைகளை வளர்த்து வருவதை அவதானிக்க முடிகிறது.

சிலர் விலை உயர்ந்த பூனைகளை கொள்வனவு செய்து அதற்கு கடைகளில் உணவுப் பொருட்களை வாங்கி கொடுத்து நாளாந்தம் பராமரித்தும் வருகின்றனர்.

அவ்வாறு வளர்க்கப்பட்டு வரும் பூனைகளுக்கு நோய் ஏற்பட்டால் மிருக வைத்தியரிடம் கொண்டு செல்வது, ஊசி போடுவது, கிளினிக் கொண்டு செல்வது என பூனைகளை வளர்ப்பதில் ஒரு தொகை பணத்தை செலவு செய்து பூனை வளர்ப்பில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உள்நாட்டுப் பூனைகள், வெளிநாட்டுப் பூனைகள் என பலவகையான பூனைகள் தற்போது வீடுகளில் வளர்க்கப்பட்டு வருகிறது.

என்னதான் விலை கொடுத்து அழகிய பூனைகளை வளர்த்தாலும் சில சந்தர்ப்பங்களில் அதனால் பூனை வளர்ப்பாளர்கள் பல்வேறு தொல்லைகளையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில் தான் ஒரு விசித்திரப் பூனை ஒன்று ஓட்டமாவடி - தியாவட்டவான் பகுதியில் வாழ்ந்து வருகிறது.

ஓட்டமாவடி பிரதேச சபைக்கு உட்பட்ட தியாவட்டவான் பிரதான வீதியில் ஏ.எப்.எச். (AFH) எனும் பெயரில் மீன் கடை ஒன்றினை நடாத்தி வருகிறார் முகம்மட் முஸ்தபா புஹாரி என்பவர்.

அவர், மீன்பிடிப்பாளர்களிடம் மீன்களை மொத்தமாக கொள்வனவு செய்து உள்ளூர், வெளியூர் மீன் வியாபாரிகளுக்கு மீன்களை விற்பனை செய்து வருகிறார்.

தான் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் காலப் பகுதியில் குறித்த முகவரியில் மீன் கடை ஒன்றை ஆரம்பித்தேன். அது மக்கள் குடியிருப்புக்கு சற்று தொலைவில் அமைந்திருக்கிறது. நான் வெளியூர் பகுதிக்கு மீன்களை மொத்தமாக அனுப்புவதற்கு ரெஜிபோம் பெட்டிகளில் மீன்களை நிறப்பி வைத்துவிட்டு வீட்டுக்குச் சென்று விடுவேன். மறுநாள் வந்து பார்க்கின்ற போது ரெஜிபோம் பெட்டிகளை காட்டு எலிகள் சேதப்படுத்தி மீன்களையும் சேதப்படுத்தி இருக்கும். இவ்வாறு எலிகளின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வந்தது.

எலிகளை கட்டுப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டும் அது பலனளிக்கவில்லை. எனது தொழிலில் அது பாரிய நஸ்டத்தை ஏற்படுத்தியது என எம்மிடம் தெரிவித்தார் மீன் விற்பனையாளர் புஹாரி .

தனது தொழில் ரீதியான முன்னேற்றங்களை அவர் தொடர்ந்தும் எம்மிடம் கூறுகையில்,

சில மாதங்கள் கடந்தது வழமை போன்று மீன் கடையினை திறப்பதற்காக வீட்டில் இருந்து வந்தேன். எனது மீன் கடைக்கு முன்னால் கூடுதலான பூனைகள் நின்றன. ஒரிரு நாட்களின் பின்னர் ஒரு பெண் பூனையைத் தவிற ஏனைய பூனைகள் அனைத்தும் சென்று விட்டன. அந்த பெண் பூனை மட்டும் எனது மீன் கடைக்குள் நின்றது. அதனை நான் விரட்டவுமில்லை. அந்தப் பூனை நீண்ட காலம் என்னுடன் பழகியது போன்று என் அருகே வந்தது.

அந்த பூனை எனது மீன் கடையில் தங்கியது. அங்கு வரும் எலிகளை வேட்டையாடி எனது தொழிலுக்கு உதவியாக இருந்தது.

மீன்களையும், ரெஜிபோம் பெட்டிகளையும் பெரிதும் சேதப்படுத்தி வந்த எலிகளை விரட்டுவதில் அங்கிருந்த பூனை பெரிதும் உதவியாக இருந்தது.

ஒரு ஊழியர் போன்று அந்தப் பூனை எனது தொழிலுக்கு பெரிதும் உதவியாக இருந்தது. அந்தப் பூனை பல முறை குட்டிகள் போட்டது பலரது கண்களையும் ஈர்க்கும் வகையில்  குட்டிகள் அழகாக இருந்தது.

அங்கு வரும் நபர்கள் பூனைக் குட்டிகளை வளர்ப்பதற்காக ஆர்வத்துடன் எடுத்தும் செல்வார்கள்.

தாய் பூனை எனது மீன் கடைக்கு வரும் நபர்களை கண்டு ஒதுங்காமல் விரண்டு ஓடாமல் அங்கேயே அந்தப் பூனை நிற்கும். மீன் கடையில் குவிந்து கிடக்கும் மீன்களை அது தானாக எடுத்து உண்ணாமல் நான் கொடுக்கும் மீன்களை மாத்திரம்தான் சாப்பிடும்.

பூனையின் உதவியுடன் தற்போது எலிகளின் தொல்லைகள் இல்லாமல் எனது தொழிலை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றேன் என புஹாரி கூறினார்.

மனிதர்களுக்கு தொல்லைகள் கொடுக்கும் வகையில் பல உயிரினங்கள் இருந்தாலும் சில செல்லப்பிராணிகள் மனிதர்களுடன் பிணைப்பை ஏற்படுத்தும் வகையில் வாழ்ந்து வருவது இவ்வாறான சம்பவங்கள் மூலம் அறிய வருகிறது.

இவ்வாறான நிலையில்தான் மீன் வியாபாரி புஹாரி அவர்களின் கடையில் தனித்துவமான நடத்தை கொண்ட பூனை வளர்ந்து வருவது அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail