வல்பொல லாலா கைது!

News
Editor 2026-03-24 10:34:00

பல கூர்மையான ஆயுதங்கள், வாள்கள் மற்றும் அரிவாள்களுடன் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட ஒருவரை முல்லேரியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முல்லேரியா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பணியில் இருந்த பொலிஸ் குழுவினர், வல்பொல சந்திப்பில் நடத்திய விசேட சோதனையின்போது, ஐஸ்  போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இந்த நபரிடம் போதைப்பொருட்களுடன் தராசும் இருந்தது கண்டறியப்பட்டதால், பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுததனர். 

அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது, ​​பல கூர்மையான ஆயுதங்கள், வாள்கள் மற்றும் அரிவாள்கள் கண்டெடுக்கப்பட்டன. அவை குற்றங்களைச் செய்யப் பயன்படுத்தப்பட்டனவா என்பதைத் தீர்மானிக்க மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

சுமார் 38 வயதுடைய "வல்பொல லாலா" என அழைக்கப்படும் சுமித்ரா ஆராச்சிகே லலந்த குணவர்தன என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபர் இன்று (24)  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail