அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானிய எரிசக்தி நிலையங்கள் மீதான திட்டமிடப்பட்ட தாக்குதல்களை ஏப்ரல் (06) வரை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளார்.
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தனது 'ட்ரூத்' சமூக ஊடகக் கணக்கில் பதிவிட்ட ஒரு பதிவில், இந்த முடிவு ஈரானின் கோரிக்கையின் பேரில் எடுக்கப்பட்டதாகவும் இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் "மிகவும் சிறப்பாகச் சென்று கொண்டிருப்பதாகவும்" கூறியுள்ளார்.
48 மணி நேரத்துக்குள் ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால், ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதி கடந்த சனிக்கிழமை எச்சரித்திருந்தார்.



