குவைத் சர்வதேச விமான நிலையம் மீதான தாக்குதல்:

World
Editor 2026-03-29 12:52:00

குவைத் சர்வதேச விமான நிலையம் மீது பல ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதல்களால் விமான நிலையத்தின் ரேடார் அமைப்புக்குக் கணிசமான சேதம் ஏற்பட்டதாகவும் ஆனால் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதல்களை ஈரான், அதன் அமைப்புகள் மற்றும் அவற்றுக்கு ஆதரவளிக்கும் ஆயுதக் குழுக்கள் நடத்தியதாக அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சமீபத்திய ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து விமான நிலையத்தின் எரிபொருள் தொட்டிகளில் ஏற்பட்ட தீ, 58 மணி நேரத்துக்குப் பின்னர் அணைக்கப்பட்டதாக குவைத் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail