டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிரான மாபெரும் போராட்டங்கள்!

World
Editor 2026-03-29 12:20:00

அமெரிக்கா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிரான மாபெரும் போராட்ட இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக மில்லியன் கணக்கான மக்களை ஈர்த்திருந்த 'அரசர்கள் வேண்டாம்' போராட்டங்களின் மூன்றாம் கட்டத்தை இது குறித்தது.

ஈரானுடனான போர், கூட்டாட்சி குடிவரவுச் சட்டங்களை அமல்படுத்துதல் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திணித்த கொள்கைகளுக்கு எதிராகப் போராடுவதாகப் போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

நியூயார்க், வாஷிங்டன் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட அமெரிக்காவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் தற்போது போராட்டங்கள் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போராட்டக்காரர்கள், டிரம்ப், உப ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் பிற நிர்வாக அதிகாரிகளின் உருவ பொம்மைகளைக் காட்சிப்படுத்தி, அவர்களைப் பதவியிலிருந்து நீக்கவும் கைது செய்யவும் கோரிக்கை விடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail