இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரா கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
2026 இந்தியன் பிரீமியர் லீக் உட்பட சர்வதேச பிரீமியர் லீக் போட்டிகளில் பங்கேற்பதற்கு தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவிக்கும் கடிதத்தை வழங்குமாறு இலங்கை கிரிக்கெட் சபையைக் நிர்ப்பந்திக்கக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் ஷம்மி சில்வா, செயலாளர் பந்துல திசாநாயக்க, பொருளாளர் சுஜீவ கொடலியத்த மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஆஷ்லி டி சில்வா ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
சிரேஷ்ட சட்ட ஆலோசகர் ஜி.ஜி. அருள்பிரகாசம் மூலம் தாக்கல் செய்யப்பட்ட இந்தப் மனு, இன்று (02) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஏப்ரல் 09 அன்று இப்பிரதியை விசாரிக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், பிரதிவாதிகளுக்கு அறிவிப்புகளை அனுப்புமாறும் உத்தரவிட்டது.



