தர்மபுரத்தில் ஓர் அதர்மம்!

crime
Editor 2026-04-27 12:30:00

40,000 ரூபாவுக்கு 2 வயது சிறுமியை விற்று, அந்தப் பணத்தில் 15,000 ரூபாவுக்கு கைத்தொலைபேசி வாங்கிய நபர், அச்சிறுமியின் தாய் மற்றும் அச்சிறுமியை வாங்கிய பெண் ஆகியோரை தர்மபுரம் பொலிஸ் தலைமையகம் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கிறது.

அச்சிறுமியையும் பொலிஸ் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கைத்தொலைபேசியும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றத்துக்காக அச்சிறுமியின் தாய், அவரது சட்டபூர்வமற்ற கணவர் மற்றும் அச்சிறுமியை வாங்கியதாகக் கூறப்படும் பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனது தற்போதைய சட்டபூர்வமற்ற கணவர் , கொழும்புப் பகுதியில் உள்ள ஒரு பெண்ணுக்குப் பணத்துக்காகத் தனது இரண்டு வயது மகளை விற்றதாக அச்சிறுமியின் தாய் கூறியதையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்தி சந்தேக நபர்கள் அனைவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail