புதிதாக திருமணம் செய்த இளைஞர் சடலமாக மீட்பு!

Provincial
Editor 2026-05-13 12:43:00

உடப்பில் உள்ள பூனபிட்டிய களப்பிலிருந்து புதிதாகத் திருமணமான இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக உடப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

உடப்பு பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவரின் சடலமே நேற்று (12) மாலை கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த இளைஞர், மீன்பிடிப்பதற்காக பூனபிட்டிய கால்வாய்க்குத் தனியாக வந்ததாகவும், அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இந்தத் துரதிர்ஷ்டவசமான  சம்பவத்தைச் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

பொலிஸார் நடத்திய விசாரணைகளின்படி, சம்பந்தப்பட்ட அந்த இளைஞர் மீன்பிடிப்பதற்காகத் தனது சைக்கிளில் பூனபிட்டிய கால்வாய்க்குச்  சென்றதாகவும் ஏதோ ஒரு காரணத்துக்காக அவர் நீரில் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து உடப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail