அக்கரைப்பற்று அதிரடிப்படை நிந்தவூரைச் சேர்ந்த இருவரைக் கைது செய்தது!

crime
Editor 2026-05-17 11:07:00

(பாறுக் ஷிஹான்)

ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களை கடத்தி விநியோகித்த சந்தேக நபர்களை அக்கரைப்பற்று (தம்பட்டை)  விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம்  அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைவாக அக்கரைப்பற்று (தம்பட்டை) விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது வீடொன்றில் வைத்து  இரு சந்தேக நபர்கள்   போதைப் பொருட்களுடன் கைதாகினர்.

இவ்வாறு கைதானவர்கள் நிந்தவூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் ஏலவே இவர்கள் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்பட்டவர்கள் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர்கள் இப்பகுதியில் மிக நீண்ட காலமாக  போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பதுடன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும்  கைதானவர்கள் 30 மற்றும் 50 வயது மதிக்கத்தக்கவர்கள் என்பதுடன் 40 கிராம் ஐஸ் மற்றும்  60 கிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள் கைத்தொலைபேசிகள் என்பன சந்தேக நபர்கள் வசம் இருந்து விசேட அதிரடிப்படையினர் மீட்டு சட்ட நடவடிக்கைக்கா நிந்தவூர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail