வீரகத்தி தனபாலசிங்கம் எழுதிய 'பத்திரிகைத்துறையில் என் கதை ' நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.

கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி ஓய்வுபெற்ற பிரதி அதிபர் தம்பையா இராஜரத்தினம் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் சட்ட நிபணர் கனக ஈஸ்வரன் பிரதம அதிதியாகவும் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பேர்ஸ் சிலோன் லிமிட்டெட் நிருவாகப் பணிப்பாளர் குமார் நடேசன் கௌரவ அதிதியாகவும் கலந்துகொள்கிறார்கள்.
வாழ்த்துரையை பேராசிரியர் சின்னையா மௌனகுருவும் நூல் வெளியீட்டுரையை பேராசிரியர் தேவராசா முகுந்தனும் (இலங்கை திறந்த பல்கலைக்கழகம்) கருத்துரைகளை பேராசிரியர் அருளானந்தம் சர்வேஸ்வரன் (கொழும்பு பல்கலைக்கழக சட்டபீடம்), சமூக, அரசியல் செயற்பாட்டாளர் ஏ.யதீந்திரா ஆகியோரும் நிகழ்த்துவர்.
மூத்த பத்திரிகையாளரும் கலை இலக்கிய ஆளுமையுமான அன்னலக்சுமி இராஜதுரையை நூலாசிரியர் கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெறும்.
தயாபரன் ரெஷாங்கன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார்.



