அமெரிக்க உளவுத்துறைத் தலைவர் துளசி கபார்ட் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனது கணவரின் உடல்நலக்குறைவு காரணமாக இந்த முடிவை எடுத்ததாக அவர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் தெரிவித்துள்ளார்.
"கடந்த பதினொரு ஆண்டுகளாக ஆபிரகாம் என் திருமண வாழ்வின் தூணாக இருந்து வருகிறார். எனது பணியிலும், தற்போதைய பதவியின் பொறுப்புகளிலும் அவரது ஆதரவு விலைமதிப்பற்றது.
அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஆபிரகாமுடன் இந்த சவாலான நேரத்தில் நான் இருக்க வேண்டியிருப்பதால், ஜூன் (30) முதல் அமுலுக்கு வரும் எனது ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளுங்கள். என அவர் தெரிவித்துள்ளார்.



