இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தொடர் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, இஸ்ரேலும் பதிலடியாக ஈரானிய இலக்குகள் மீது பல ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
அந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்துமாறு இஸ்ரேலிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈரானும் இஸ்ரேலும் தங்களது சொந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளன, ஆனால் மற்றொரு தாக்குதலைக் காண விரும்பவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் அழைத்து, பதிலடித் தாக்குதல்களை நடத்த வேண்டாம் என்று அவரிடம் கூறப்போவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.



