ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக, அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு சமூக வலைதளங்களில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் அறிவித்துள்ளது.
ஓமான் கடற்கரைக்கு அப்பால் அமெரிக்க இராணுவத்தின் அப்பச்சி ( Apache) ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தற்போதைய பேச்சுவார்த்தைகளுக்கு இவை தடையாக இருக்காது என்றும் அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஹோர்முஸ் ஜலசந்தியைச் சுற்றியுள்ள வான் பாதுகாப்பு மற்றும் ரேடார் அமைப்புகளை ஆரம்பகட்ட தாக்குதல்கள் குறிவைத்ததாகவும், மேலும் தாக்குதல்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.



