பொத்துவிலில் டெங்கு ஒழிப்புப் பணிகள் முன்னெடுப்பு!

Provincial
Editor 2026-06-16 11:12:00

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஏற்பாட்டிலும், சுகாதார அமைச்சின் வழிகாட்டலிலும் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தேசிய “நுளம்புக் கட்டுப்பாட்டு வாரம்” ஆரம்ப நாள் நிகழ்வுகள் பொத்துவில் பிரதேசத்திலும் நேற்று (15) வெகு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன.

'வளமான நாடு – அழகான வாழ்க்கை' எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக, பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் பொத்துவில் பிரதேச சபையும் இணைந்து இந்த விசேட டெங்கு கட்டுப்பாட்டு சிரமதானப் பணிகளை மேற்கொண்டன.

இதன் ஒரு கட்டமாக, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பொத்துவில் பஸ் தரிப்பிடம், பொதுச் சந்தை உள்ளிட்ட முக்கிய பொது இடங்களில் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் மற்றும் பிரதேச சபை ஊழியர்களால் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. டெங்கு நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் குறித்த பகுதிகள் துப்பரவும் செய்யப்பட்டன.

பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி உவைஸ் பாறுக் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்களான றிழ்வான், முஹைடீன் உள்ளிட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் இதில் கலந்துகொண்டனர்.

இந்த டெங்கு ஒழிப்புப் பணியினை வினைத்திறனாக முன்னெடுக்கும் நோக்கில், பொத்துவில் பிரதேச சபை தவிசாளரின் பணிப்புரையின் பேரில், சபைக்குச் சொந்தமான கனரக வாகனங்கள் மற்றும் களப்பணியாளர்கள் இதற்காகப் பங்களிப்புச் செய்திருந்தனர்.

பொது மக்கள் தங்கள் வீடுகளையும் சுற்றுப்புற சூழலையும் மற்றும் பொது இடங்களையும் டெங்கு நுளம்புகள் பெருகாதவாறு சுத்தமாக வைத்திருக்குமாறு சுகாதார அதிகாரிகள் இதன்போது பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இம்மாதம் 15 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நடைபெறும் இந்நுளம்புக் கட்டுப்பாட்டு வாரத்தின் முதல் மூன்று நாட்களில் பொது இடங்கள், வீதியோரக் கான்கள், பஸ் தரிப்பிடங்கள் உள்ளிட்ட சந்தைப் பகுதிகளில் விசேட பரிசோதனை மற்றும் துப்பரவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail