அமெரிக்க விமானப்படையின் பி-52 ஸ்ட்ராடோஃபோர்ட்ரெஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் எட்டுப் பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள எட்வர்ட்ஸ் விமானப்படைத் தளத்தின் ஓடுபாதையில் இந்த விபத்து நிகழ்ந்ததையடுத்து, அத்தளத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.



