மருதமுனைக்கு தனியான நகரசபை வேண்டும் என கோரிக்கை! -

Provincial
Editor 2026-06-17 12:22:00

பாறுக் ஷிஹான்

மருதமுனைக்கான தனியான நிர்வாக அலகு வேண்டும். அதிகாரப் பகிர்வின் ஊடாக இதனைப் பெற்று இன்னும் எங்கள் மக்களின் தேவைகளை சிறப்பாகச் செய்ய வேண்டும் என மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் அமைய செயற்பாட்டாளர்   எம்.ஐ.எம். முஹர்ரப் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் மருதமுனை பிரதேசததுக்கான தனியான நகர சபையை வலியுறுத்தி விசேட ஊடகவியலாளர் மாநாடு  செவ்வாய்க்கிழமை (16) இரவு  மருதமுனை தனியார் விடுதியில் நடைபெற்றபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அமையத்தின் செயற்பாட்டாளர்களான   பொறியியலாளர் எம்.எஸ்.எம். பஸீல் மற்றும்  சட்ட ஆலோசகர் சட்டத்தரணி எம்.எம்.எம். முஅஸ்ஸம் ஆகியோர் கலந்து கொண்டு தத்தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவிக்கையில்,

மருதமுனைக்கான தனியான நிர்வாக அலகு வேண்டும். இதைப் பெறுவது எமது தார்மீக உரிமையாகும். எங்களிடம் நிர்வாக ஆளணிகள் உள்ளன. அதிகாரப் பகிர்வின் ஊடாக இதனைப் பெற்று இன்னும் எங்கள் மக்களின் தேவைகளை சிறப்பாகச் செய்ய முடியும். நகரசபை கிடைப்பதன் ஊடாக இன்னும் அதிக அபிவிருத்திகளை மேம்படுத்த முடியும். மருதமுனை பிரதேசத்துக்குத் தனியான நகர சபை அமைப்பதற்கான அனைத்து தகுதிகளும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்

இன்று எமது மக்கள் மருதமுனை பிரதேசத்துக்கான தனியான நகரசபை கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். சாய்ந்தமருது நகர சபை அம்மக்களுக்கு கிடைத்தது போன்று எமக்கும் வழங்கப்பட வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்.அதே போன்று சாய்ந்தமருது நகர சபை வழங்கப்பட்ட விடயமானது  அப்பகுதி மக்களின் தியாகத்துக்கும் போராட்டத்துக்கும் கிடைத்த ஒரு வெற்றி என்று நாம் கூற வேண்டும்.

எனவேதான் விரைவில் இவ்விடயம் குறித்து எதிர்காலத்தில்  அரசாங்க அமைச்சு,அதிகாரிகள் உட்பட ஆளுநரையும் சந்தித்து   பேச உள்ளதாக  அவர் தனது கருத்தில் குறிப்பிட்டார்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail